61 வயதில் உலகத்தை சுற்றி வரும் ஜிப்ஸி மனிதர்.. உற்சாக வரவேற்பளித்த தமிழக மக்கள்..!!

 
சைக்கிளில் உலகை சுற்றும் முதியவர்
61 வயதில் உலகை சுற்றி வரும் ஜிப்ஸி மனிதர் தற்போது தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் ரிச் ஹேகெட் (வயது 61). இவர், 1962ம் ஆண்டு பிறந்தார். திருமணம் ஆகாத இவர், தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். படிப்பில் பெரிய அளவில் சாதிக்காத இவர், சமையலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் சமையல் செய்து வந்த இவர் தற்போது ஒய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில், இவர் உலகம் முழுதும் சுற்றி பார்க்க வேண்டும் என மனதில் ஆவல் தோன்றியுள்ளது. 1991-ல் இருந்து தற்போது வரை 120 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியா வழியாக 2014, 2015, 2018 தற்போது 2023ல் பயணம் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு முதல் இந்த முறை சைக்கிள் ஒட்டி உலகை சுற்றும் பயணத்தை தொடங்கியுள்ளார். நான் பயணிக்கும் பைக் ஒரு Recombinant பைக், Chez Republic பைக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட AZUB. 2013ல் இருந்து 40 ஆயிரம் கிமீக்கு மேல் இந்த சைக்கிளில் பயணித்துள்ளார். தினசரி சராசரியாக ஒரு நாளைக்கு 80-125கிமீ செல்கிறார். போகும் இடங்களில் உணவகங்களில் தங்கி செல்வதாகவும், நாட்டைப் பொறுத்து பல நேரங்களில் சொந்த உணவை சமைத்து சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் அருகே கடந்து சென்று பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அதேபோன்று சாலையில் செல்லும் பொழுது பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

From around the web