அமெரிக்க விமானப்படையின் ‘கிளவுட் ஒன்’ தளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவல்... ரேடார், வீரர்கள் தரவுகள் குறித்து பரபரப்பு!

 
ஆன்லைன் ஸ்கேம் ஹேக்கர்கள்

அமெரிக்க விமானப்படையின் ‘கிளவுட் ஒன்’ தளத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் நடைபெற்ற தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளின் போது சைபர் தாக்குதல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விமானப்படை வீரர்களின் விவரங்கள், ஊதியம் மற்றும் வான் பாதுகாப்பு ரேடார் தகவல்களைக் கையாளும் இத்தளத்தில் நடந்த ஊடுருவல் குறித்து அமெரிக்க விமானப்படை தரப்பு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

ஆன்லைன்

அமெரிக்க விமானப்படையின் ‘கிளவுட் ஒன்’ தளத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளின் போது ஹேக்கர்கள் ஊடுருவியிருப்பது தெரியவந்துள்ளது.

இத்தளம் விமானப்படை வீரர்களின் தனிப்பட்ட விவரங்கள், ஊதியத் தகவல்கள் மற்றும் வான் பாதுகாப்பு ரேடார் தொடர்பான தரவுகளை நிர்வகித்து வருகிறது. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் மற்றும் முக்கிய அல்லது ரகசியத் தகவல்கள் திருடப்பட்டனவா என்பது குறித்த விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஆன்லைன் மோசடி

இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்க விமானப்படை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.