சென்னையில் ஹால்மார்க் முத்திரை இல்லாத 803 கிராம் தங்க நகைகள் பறிமுதல்!

 
தங்கம்

 

 

சென்னையில் உள்ள தங்க நகைக் கடையில் இந்திய தர நிர்ணய ஆணையம் நடத்திய அமலாக்க தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் மொத்தம் 803.99 கிராம் ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய தர நிர்ணய ஆணையத்தின் சென்னை கிளை அலுவலக அதிகாரிகள், அம்பத்தூரில் அமைந்துள்ள ஒரு தங்க நகை கடையில் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

தங்கம்

இந்த நடவடிக்கையின்போது, கட்டாய ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிஐஎஸ் சட்டம், 2016-ன் விதிமுறைகளை மீறுவதாக இருந்ததால், அந்த நகைகள் உடனடியாக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையின்போது பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் அளவிலான தாலிகள், குழந்தைகள் வளையல்கள், காதணிகள் மற்றும் பதக்கங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

தங்கம் தங்கத்தின்

நுகர்வோர் நலனைப் பாதுகாக்கவும், தரமற்ற பொருட்கள் சந்தையில் புழங்குவதைக் கட்டுப்படுத்தவும் இதுபோன்ற சந்தை கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்திய தர நிர்ணய ஆணையத்தின் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.