இனி வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் - அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது!

 
வெள்ளி விலை தங்கம்

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், நகை வணிகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்காகவும் வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயமாக்கத் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வெள்ளி

ஏற்கெனவே கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது அதே முறை வெள்ளி நகைகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் முதல் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.

வெள்ளி கொலுசு சோதனை

இதற்காக 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் முறை வெள்ளிப் பொருட்களுக்கும் முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய விதிகளை முறையாகப் பின்பற்றாமல் மீறும் வியாபாரிகளுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.