ஹேண்ட்பம்ப் தண்ணீரில் தீப்பிடித்ததா? உத்தரப் பிரதேச கிராமத்தில் பரபரப்பு... பகீர் வீடியோ!

 
தண்ணீர்

 

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், ஹேண்ட்பம்பில் இருந்து வெளியேறிய தண்ணீரில் எண்ணெய் போன்ற பொருள் கலந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரில் தீக்குச்சியை வைத்தபோது தீப்பிடித்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

சுமேர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌரிகலா கிராமத்தில் அனில் துபே என்பவரின் வீட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கால்நடைகளைக் குளிப்பாட்டியபோது, ஹேண்ட்பம்ப் தண்ணீரில் வழக்கத்திற்கு மாறான பிசுபிசுப்புத் தன்மையை அவர் கவனித்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்களுக்குத் தகவல் தெரிவித்தார். தண்ணீரில் பெட்ரோல் அல்லது டீசல் போன்ற பொருள் கலந்திருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால், இதுவரை அந்தப் பொருள் என்ன என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

 

சம்பவம் தொடர்பாக ஹேண்ட்பம்பில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிலத்தடி நீரில் ஏதேனும் ரசாயனப் பொருள் கலந்துள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகே தண்ணீரில் கலந்திருக்கும் பொருளின் தன்மை தெரியவரும். அதுவரை அந்தத் தண்ணீரைப் பயன்படுத்துவதையும், தீ வைத்து சோதனை செய்வதையும் தவிர்ப்பது பாதுகாப்பானது