சிறுமிக்கு கை, கால்களில் சூடு சித்ரவதை!! வீடியோ!!

 
டெல்லி சிறுமி சித்ரவதை

இந்தியாவில் எத்தனை தான் சட்டங்கள் இருந்தாலும் பரவலாக குழந்தை தொழிலாளர்களை  பணிக்கு அமர்த்தும் வழக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. குடும்ப கஷ்டத்தை தீர்ப்பதற்காக சின்னஞ்சிறு வயதிலேயே வீட்டு வேலை உட்பட மற்ற வேலைகளுக்காக  அவர்களுடைய பெற்றோரே  பணிக்கு சேர்த்து விடுகின்றனர்.  பல நேரங்களில் அக்குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்களும் நடைபெறுகின்றன. 

null



 


அந்த வகையில், டெல்லியில் வசித்து வரும்  10 வயது சிறுமி ஒருவர், துவாரஹா பகுதியில் வசிக்கும் பூர்ணிமா பக்‌ஷியின் வீட்டில் வீட்டு வேலைக்காக பணியில் அமர்த்தப்பட்டார்.  பூர்ணிமாவும், அவரது கணவரும் வெவ்வேறு   தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது குழந்தையை கவனித்துக் கொள்ள அந்த 10 வயது சிறுமி பணிக்கு அமர்த்தப்பட்டார்.   வீட்டு வேலைகளை செய்ய சொல்லி அந்த சிறுமியை பூர்ணிமா சித்திரவதை செய்து வந்துள்ளார்.  இதில் சிறுமியின் குடும்பம் பூர்ணிமாவின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில்  தான் வசித்து வருகின்றனர்.  சுமார் 2 மாதமாக அச்சிறுமி பூர்ணிமா வீட்டில் பணி புரிந்து வந்தார். ஆனால்   சிறுமி சித்திரவதை செய்யப்படுவதை அவரது குடும்பத்தினருக்கு தெரியவே இல்லை. 


இந்நிலையில், சிறுமியின் உறவுக்கார பெண் ஒருவர், சிறுமி வேலை செய்யும் வீட்டைக் கடந்து  வேலைக்கு சென்ற போது   பால்கனியில்   சிறுமியை பூர்ணிமா தாக்கியுள்ளார். இதனை கண்ட அவர், சிறுமியின் குடும்பத்துக்கு தகவல் கொடுத்தார். உடனே  பூர்ணிமாவின் வீட்டுக்கு வந்து இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் தகராறு  ஏற்பட்டது.  பூர்ணிமாவையும் அவரது கணவரையும் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலையில் இழுத்து போட்டு சராமாரியாக தாக்கத் தொடங்கினர். இச்சம்பவம் குறித்த   வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.  

டெல்லி சிறுமி சித்ரவதை


 இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பூர்ணிமாவையும்  , அவரது கணவர் கவுசிக்கையும்   காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியின் முகம் வீங்கி, காயம் அடைந்திருந்தது. பூர்ணிமா அனைத்து வேலைகளையும் செய்ய வற்புறுத்தி சிறுமியை அடித்துள்ளார். தவறு செய்யும் போதெல்லாம் சிறுமிக்கு பூர்ணிமா சூடு வைத்துள்ளார். இதனால்  சிறுமியின் கை, கால்களில் பல தீக்காயங்கள் இருந்தன . இதனால் சிறுமி மிக மோசமான அளவு மனநிலையில் பாதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் பெரிதும் பயந்து போயுள்ளார்.   கடந்த 4 நாட்களாக பட்டினி கிடந்ததாகவும், சாப்பிடுவதற்கு பழைய உணவுகளே வழங்கப்பட்டதாகவும் சிறுமி தன்னிடம் தெரிவித்ததாக அவரது மாமா தெரிவித்துள்ளார்.
ஆனால், சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தீக்காயங்கள் பழையவை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட சிறுமி குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருடன் தங்கியிருந்த காலத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டப்பட்ட தம்பதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுபோல் ஒரு தவறை  எந்த ஒரு ஏழைக் குழந்தை மீதும்  யாரும் செய்யத் துணியாதபடி அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web