நடிகர் கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைங்க... 20 ஆண்டுகால வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 
நடிகர் கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைங்க... 20 ஆண்டுகால வழக்கில்  உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நிலத்தை நடிகர் கவுண்டமணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தன்னுடைய நிலத்தை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என நடிகர் கவுண்டமணி வழக்குத் தொடர்ந்திருந்தார். சுமார் இருபது வருடங்களுக்கு மேல் நடந்த இந்த வழக்கில் கவுண்டமணிக்கு சாதகமாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை தற்போது சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது. 
நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் கவுண்டமணி. கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருப்பவர் இப்போது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 1996ல் சென்னை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் நளினி என்பவருக்கு சொந்தமான நிலத்தை கவுண்டமணி வாங்கி இருக்கிறார். இந்த இடத்தில் 22,700 சதுர அடியில் வணிக வளாகம் கட்டுவதற்காக அபிராமி பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். 

நடிகர் கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைங்க... 20 ஆண்டுகால வழக்கில்  உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

15 மாதங்களில் கட்டடப் பணிகள் முடித்துத் தரவேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். இதற்காக, ரூ. 3.58 கோடி ஒப்ந்ததாரர் கட்டணம் போடப்பட்டு, 1996 முதல் 1999 காலகட்டம் வரை ரூ. 1.4 கோடி கவுண்டமணி தரப்பில் செலுத்தப்பட்டது. ஆனால், 2003 வரையிலுமே இங்கு எந்தவொரு பணியும் தொடங்கப்படவில்லை எனச் சொல்லி அந்தத் தனியார் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார் கவுண்டமணி. 
மேலும், அவரது இடத்தில் ரூ. 46. 51 லட்சத்துக்கு மட்டுமே பணிகள் முடிவடைந்திருப்பதாகவும், தற்போது முடித்திருக்கும் பணிகளை ஒப்பிடுகையில் ரூ. 63 லட்சம் அதிகமாகவே கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கவுண்டமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், கவுண்டமணியின் இடத்தைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என 2008ஆம் ஆண்டு தனி நீதிபதி உத்தரவிட்டார். 

நடிகர் கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைங்க... 20 ஆண்டுகால வழக்கில்  உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் கட்டுமான நிறுவனம், கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த ஆர். சுப்பிரமணியன், ஆர். சக்திவேல் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து அவர்களது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்திய கவுண்டமணியின் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web