'தொங்கு சட்டசபை'.. விஜய் போடும் புதிய கணிப்புகள்!

 
விஜய் ரிசல்ட் விஜய் ரிசல்ட்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், "தொங்கு சட்டசபை" ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவுகள் அரசியல் வட்டாரத்தை உற்றுநோக்க வைத்துள்ளன.

காமாக்யா அனலிட்டிக்ஸ் வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகளின்படி, தமிழகத்தில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 95 இடங்கள், அதிமுக கூட்டணி 84 இடங்கள், மற்றும் விஜய் தலைமையிலான தவெக 81 இடங்களைப் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், விஜய் ஒரு 'கிங் மேக்கராக' உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

விஜய்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்ற பெரிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை இழுக்கவோ அல்லது பேரத்தில் ஈடுபடவோ முயற்சி செய்யலாம் என்பதால், விஜய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். வெற்றி பெறும் தவெக வேட்பாளர்கள் அனைவரும் மே 4-ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரு புதிய கட்சியாகப் போட்டியிட்டு, எக்சிட் போல் கணிப்புகளிலேயே 80-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் என்ற செய்தி தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆட்சி அமைப்பதில் தவெக-வின் பங்கு மிக முக்கியமாக இருக்கும் என்பதால் விஜய் தனது அடுத்தகட்ட மூவ்களை மிகவும் கவனமாகத் திட்டமிட்டு வருகிறார்.

விஜய்

கட்சித் தாவல் அல்லது குதிரை பேரத்தைத் தவிர்க்க, வெற்றி பெற்ற வேட்பாளர்களைத் தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாகத் தனது இருப்பை நிலைநாட்ட அவர் உறுதியாக உள்ளார்.