மாடல் அழகி தூக்கிட்டுப் போட்டு தற்கொலை... பெரும் சோகம்!

 
மாடல் அழகி

 

உடுப்பி அடுத்த கல்மடி பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதுடைய மாடல் அழகி கிருதி பங்கெரா. முன்னாள் ஓட்டல் ஊழியரான இவர், மாடலிங் துறையில் தீவிர ஆர்வம் கொண்டு பணியாற்றி வந்தார். மணிப்பாலில் உள்ள ஓட்டல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த ஒரு மாதமாக கல்மடியில் உள்ள தனது தாய் மற்றும் சகோதரியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

சம்பவத்தன்று மதியம் தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் கிருதி பங்கெரா மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் செல்போனில் யாரிடமோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரெனத் தனது தாயைத் தள்ளிவிட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு தனது அறைக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்ட அவர், அங்கிருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்துத் தகவலறிந்த உடுப்பி காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாடல் அழகி கிருதி பங்கெரா கடுமையான மன அழுத்தம் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமான விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.