காலையிலேயே மகிழ்ச்சி... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!

 
சிலிண்டர்

மாதத்தின் முதல் நாளிலேயே மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இன்று பிப்ரவரி 1ம் தேதி  முதல் அறிவிப்பாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வணிகர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.

இன்று பிப்ரவரி 1ம் தேதி முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்துள்ளது. சிலிண்டர் விலையில் இந்த குறைப்பு இந்தியா முழுவதும் நடந்துள்ளது.

வணிக சிலிண்டர்

இன்று முதல் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்துள்ளது.  அதே நேரத்தில்  வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் அதாவது 14 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இன்றி சென்னையில் ரூ.818.50க்கு விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.

சிலிண்டர்

அதே நேரத்தில்  பாட்னாவில் ரூ.892.50க்கும்,  கொல்கத்தாவில் ரூ.829 க்கும்,  மும்பையில் ரூ.802.50 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.1,966க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ரூ.6.50 குறைந்து ஒரு சிலிண்டர் 1,959.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web