பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 1 ரூபாய்க்கு கிடைக்கும் காட்டன் நாப்கின்.. மத்திய அரசு செயல்படுத்திய சூப்பர் திட்டம்!

 
நாப்கின்

கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் உயர்தர சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் ஜன ஔஷதி சுவிதா ஆக்ஸோ திட்டத்தில் ஒரு ரூபாய்க்கு காட்டன் நாப்கின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 4, 2018 அன்று, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இந்திய பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக, இந்திய மத்திய அரசு, ஔஷதி சுவிதா ஆக்ஸோ-மக்கும் சானிடரி நாப்கின் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த சானிட்டரி நாப்கின்கள் மக்களுக்கு மிகவும் மலிவான மற்றும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த நாப்கின்கள் பொதுவாக நடுத்தர அளவு மற்றும் xl அளவுகளில் கிடைக்கும். ஒரு நாப்கின் விலை வெறும் 1 ரூபாய். ஒரு பாக்கெட்டில் 10 நாப்கின்கள் உள்ளன. இதன் விலை 10 ரூபாய் மட்டுமே. XL அளவுள்ள சானிட்டரி நாப்கின்கள் ஒரு பாக்கெட்டுக்கு 15 ரூபாய். மத்திய அரசின் இந்த ஜன ஔஷதி சுவிதா ஆக்ஸோ-மக்கும் சானிட்டரி நாப்கின்கள் பிரதம மந்திரியின் கட்டுப்படியாகக்கூடிய மருந்துகள் திட்டத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கடைகளில் கிடைக்கும்.

தமிழகத்தில் மக்கள் மருந்தகம் என்ற பெயரில் இந்த மருந்து கடைகள் செயல்படுகின்றன. இந்த மருந்து கடைகள் பெரும்பாலும் அனைத்து நகர்ப்புறங்களிலும் இயங்குகின்றன. பெண்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். பெண்களிடையே குறிப்பாக மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது, கிராமப்புறங்களில் உள்ள பெண்களை உயர்தர சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பது, அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கற்பிப்பது, கிராமப்புற பெண்களுக்கு சுகாதாரத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத நாப்கின்கள் ஆகும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web