மாதத்தின் முதல் நாளிலேயே மகிழ்ச்சி... வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைவு!

 
சிலிண்டர்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மாற்று விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் எல்.பி.ஜி சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எல்.பி.ஜி. சிலிண்டர் விலையில் ரூ.200 வரை குறைக்கப்பட்டுள்ளது: சென்னையில் இதன் விற்பனை விலை தற்போது ரூ. 3,106.00 என்ற அளவில் உள்ளது.

உணவகங்கள், ஹோட்டல்கள், டீ கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இந்த விலை குறைப்பு பெரிய அளவில் நிதிச் சுமையைக் குறைக்கும்.

கேஸ் சிலிண்டர்

வணிகச் சிலிண்டர்களின் விலை மாற்றப்பட்ட போதிலும், பொதுமக்களின் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போதைய விலை (சென்னை): ரூ. 957.50 வீட்டு உபயோகச் சிலிண்டரின் விலை மாற்றமின்றித் தொடர்ந்து அதே விலையில் நீடிக்கிறது.

வணிகச் சிலிண்டர் (19 கிலோ): ரூ. 3,106.00 (ரூ.200 குறைவு)க்கும் ட்டுச் சிலிண்டர் (14.2 கிலோ): ரூ. 957.50 (மாற்றமில்லை) நிலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.