காணும் பொங்கல்... கடற்கரை, பூங்காக்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

 
மக்கள் கூட்டம்

இன்று காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலாத் தளங்கள், கடற்கரை, பூங்காக்களில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் ஷாப்பிங் ரங்கநாதன் தெரு திநகர் கடைகள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி, காலை முதலே பொதுமக்கள் கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பம் குடும்பமாக குவிய தொடங்கினா்.

மாநகராட்சி சாா்பில் குடிநீா், மின்விளக்கு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மாநகா் பகுதியிலுள்ள முத்துநகா் கடற்ககரைப் பூங்கா, புதிய துறைமுகக் கடற்கரை, ஸ்டெம் அறிவியல் பூங்கா, எம்ஜிஆா் பூங்கா, ராஜாஜி பூங்கா, நேரு பூங்கா, ரோச் பூங்கா, படகு குழாம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனா். காணும் பொங்கலையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், திருச்செந்தூரில் 500 போலீசா உள்பட மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பொங்கல்

காணும் பொங்கலுக்காக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து முயல்தீவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் நிகழாண்டு துறைமுக விரிவாக்கப் பணிகளை முன்னிட்டு முயல்தீவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பலரும் ஏமாற்றமடைந்தனா்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!