"இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்": தமிழில் ட்வீட் போட்ட பிரதமர்!

 
பிரதமர் மோடி பிரதமர் மோடி

உலகம் முழுவதும் சித்திரை முதல் நாளைக் கொண்டாடி வரும் தமிழர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

"இந்த ஆண்டு முழுவதும் ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியம் நிறைந்திருக்கப் பிரார்த்திக்கிறேன்" என மோடி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

மோடி

தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பைக் குறிப்பிடும் வகையில், இந்த நாள் 'புதுப்பித்தல் மற்றும் புதிய தொடக்கங்களின் திருவிழா' என அவர் வர்ணித்துள்ளார். தமிழகத் தேர்தல் நெருங்கும் வேளையில், பிரதமரின் இந்தத் தமிழ் வாழ்த்து மற்றும் பண்பாட்டு ரீதியான அணுகுமுறை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே காசி தமிழ் சங்கமம், நம்ம சென்னை போன்ற நிகழ்வுகள் மூலம் தமிழர்களுடன் நெருக்கம் காட்டி வரும் மோடி, இம்முறையும் தவறாமல் தனது வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மோடி

தமிழக பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாக உள்ள நிலையில், காலையிலேயே பிரதமரின் இந்த வாழ்த்து அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.