காதலர் தின ஸ்பெஷல்... மகன்களுக்கு முத்தமிட்டு கொஞ்சும் நயன்தாரா!

இன்று காதலர் தினத்தையொட்டி, தனது இரு மகன்களையும் கொஞ்சி முத்தமிட்டபடி நடிகை நயன்தாரா பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
பலரும் தங்களது இணைக்கு காதலைத் தெரிவித்தும் வாழ்த்துகளைக் கூறியும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தக் கொண்டாட்டத்தில் நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார். ஒவ்வொரு வருடமும் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் புகைப்படங்களைப் பகிர்ந்து வரக்கூடியவர் இந்த வருடம் ஒரு அம்மாவாக தனது இரு மகன்களைக் கொஞ்சி முத்தமிட்டு அணைத்தபடி இருக்கும் கியூட்டானப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘என் உயிர், உலக் இருவரையும் நான் அதிகம் நேசிக்கிறேன். என்னுடைய இந்த வருடக் காதலர் தினத்தை முன்பெப்போதும் விட சிறந்ததாக்கியதற்கு நன்றி’ என உருகியுள்ளார் நயன்தாரா. மேலும், இருமகன்களுக்கும் ரோஜா கொடுத்தும் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். குட்டீஸூக்கும் நயன்தாரா- விக்னேஷ்சிவன் ஜோடிக்கும் ரசிகர்கள் தங்கள் கூறி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!