குடிபோதையில் பெற்றோர் துன்புறுத்தல்.. மதுரை காவல் நிலையத்தில் 9 வயது சிறுமி பகீர் புகார் !!

 
பாண்டியம்மாள்

மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியில்  களஞ்சியம் - பாண்டியம்மாள் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 9 வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4அம் வகுப்பு படிக்கிறார். இவரது பெற்றோர் மது அருந்திவிட்டு இரவில் அச்சிறுமியை வெளியே துரத்தியதாகத் தெரிகிறது. இதனால் அச்சமடைந்த அச்சிறுமி, தனது தோழி வீட்டில் தங்கி இருந்தார்.

போதையில் வீட்டில் தனிமையில் இருக்க பெற்றோர்கள் இரண்டு பேரும் மது அருந்திவிட்டு சிறுமியை இரவு நேரத்தில் வெளியே துரத்தி விட்டு விடுவதாகவும், பல நேரங்களில் தெருவிலேயும், தோழி வீட்டிலும் தங்கி வருவதாகவும் தெரியவந்துள்ளது. 

நேற்று முன்தினம் இரவும் இதுபோல பெற்றோர் துன்புறுத்தி உள்ளனர். இதையடுத்து நேற்று காலை அவனியாபுரம் காவல் நிலையத்தில் அச்சிறுமி தஞ்சம் அடைந்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவி செய்யவும், பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, மதுரை குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் ஷோபனா, டயானா உள்ளிட்டோர் அச்சிறுமியிடம் விசாரித்தனர். இது குறித்து புகாரின் பேரில், அவனியாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாண்டியம்மாள்

இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியின் தந்தை கூலி தொழிலாளி என்பதும், வேலை முடித்து வரும் அவர் தினமும் பாட்டிலோடு வந்து மது குடிப்பதும், நாளடைவில் அந்த பழக்கத்தை மனைவிக்கும் கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது.இந்நிலையில் பெற்றோர் இருவரும் குடித்து பழகி விட்டு, தங்களின் 9 வயது பெண் குழந்தையை அடித்து துன்புறுத்தியதாகவும், பல நேரங்களில் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டதாகவும் தெரிகிறது.

From around the web