நாடாளுமன்ற புதிய நிலைக்குழுவில் ஹர்பஜன் சிங், அன்புமணி ராமதாஸுக்கு இடம்!

 
ஹர்பஜன்சிங் அன்புமணி

நாடாளுமன்றத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான மாற்றி அமைக்கப்பட்ட புதிய நிலைக்குழுவின் உறுப்பினர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மற்றும் உறுப்பினர் ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2026-2027 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 26 முதல் அவை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன.

சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை மேற்பார்வையிடும் இந்த புதிய நிலைக்குழுவில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அனுபவமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.