திருப்பதியில் காதலியுடன் சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா
Aug 2, 2026, 19:00 IST
இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது காதலியான மாடல் அழகி மஹிகா சர்மாவுடன் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
திருமலை திருப்பதியில் அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஹர்திக் பாண்டியா - மஹிகா சர்மா ஜோடி ஏழுமலையானை வழிபட்டனர். மொட்டை அடித்த புதிய தோற்றத்தில், பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து ஹர்திக் பாண்டியா கோயிலுக்கு வருகை தந்திருந்தார்.
திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த ஹர்திக் பாண்டியாவைக் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
