“ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கக் கூடாது!” - ஈரானுக்குச் சீனா அதிரடி நெருக்கடி!
அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், அதனைத் திறக்கக்கோரி ஈரானின் நீண்டகால நட்பு நாடான சீனா தற்போது களம் இறங்கியுள்ளது.
இதுவரை ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்காமல் மௌனம் காத்து வந்த சீனா, தற்போது தனது பொருளாதார நலன் கருதி முதல் முறையாக வாய்திறந்துள்ளது:

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, “சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் பாதுகாப்பையும், தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்ய வேண்டியது ஈரானின் கடமை” என வாங் யீ வலியுறுத்தினார்.
அமெரிக்காவுடனான முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஈரானியத் துறைமுகங்களை முற்றுகையிடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க முயல்வதால்:

உலகின் 20% கச்சா எண்ணெய் இந்த வழியாகவே செல்கிறது. இது பாதிக்கப்பட்டால் சீனாவின் உற்பத்தித் துறை கடுமையாக முடங்கும் அபாயம் உள்ளது.
அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் ஏற்கனவே இந்தப் பாதையைத் திறக்க வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது சீனாவும் இணைந்துள்ளது ஈரானுக்குப் பெரும் ராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்குச் சீனா ரகசியமாகத் தளவாட உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இந்தச் சூழலில், ஈரானுக்குச் சீனா விடுத்துள்ள இந்தக் கோரிக்கை, தனது பிம்பத்தைச் சர்வதேச அரங்கில் நிலைநிறுத்தச் சீனா எடுக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
