அமெரிக்காவுடன் மீண்டும் மோதல்... ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடல்!

 
ஹார்முஸ் நீரிணை கப்பல் ஈரான் ஹார்முஸ் நீரிணை கப்பல் ஈரான்

அமெரிக்க ராணுவம் ஈரானுக்குள் இருக்கும் பல்வேறு முக்கிய இலக்குகள் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் கடுமையான மோதல் வெடித்துள்ளதால், உலக அளவில் பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சர்வதேச அளவில் மிக முக்கியக் கடல்வழிப் பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையைத் தற்பொழுது முழுமையாக மூடுவதாக ஈரான் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஹார்முஸ்

தங்களின் இந்த அதிகாரபூர்வ அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையை சட்டவிரோதமாகக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலின் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. தங்களின் இந்த எச்சரிக்கையை மீறி ஹோர்முஸ் ஜலசந்தியை நெருங்கும் எந்தவொரு எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்களும் தங்களுக்கு எதிரியாகவே கருதப்படும் என்றும், அவற்றின் மீது ராணுவத் தலைமை சார்பில் துல்லியமான தாக்குதல்கள் தொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஈரான் கப்பல் ஏற்றுமதி

இதற்கிடையே, தங்களின் தடையை மீறி அந்தப் பகுதியை ரகசியமாகக் கடக்க முயன்ற 2 வணிகக் கப்பல்கள் மீது ஏற்கனவே வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. மேலும் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடற்பகுதியில் தற்பொழுது நங்கூரமிட்டுள்ள எந்தவொரு வெளிநாட்டுக் கப்பல்களும் அடுத்த உத்தரவு வரும் வரை அங்கிருந்து வெளியேறக் கூடாது என ஈரான் ராணுவம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் சர்வதேசக் கடல் வணிகத்தில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது.