பள்ளிக்குள் 6 வயது சிறுமி மீது தாக்குதல்; 2 ஆசிரியர்களுடன் தலைமை ஆசிரியரும் சஸ்பெண்ட்!

 
அரியானா

 

அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள அரசு பள்ளியில் 6 வயது சிறுமி மீது சக மாணவன் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 28-ம் தேதி, பஞ்ச்குலா செக்டர் 20 பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன், 6 வயது சிறுமியை வகுப்பறைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சிறுமியின் முகம் மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டன. அவர் சண்டிகரில் உள்ள PGIMER மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கல்வித்துறை, பயிற்சி ஆசிரியர்களான சிம்ரன்ஜித் கவுர், பூஜா ராணி ஆகிய இருவரையும் முதலில் பணியிடைநீக்கம் செய்தது. தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் நீலுவும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Principal Of Haryana School Where 8-Year-Old Assaulted Girl, 6, Suspended

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்காக ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிறுமியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.