பரபரப்பு.. அதிமுக கவுன்சிலர் ஓட ஓட வெட்டி படுகொலை..!

 
அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை
அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலத்தில் 9ஆம் வார்டு உறுப்பினராக  அன்பரசன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கீரப்பாக்கத்தில் படத்திறப்பு விழாவுக்கு அன்பரசன்  சென்றிருந்தார். 

அப்போது  மர்ம கும்பல் ஒன்று அவரை நோக்கி நாட்டு வெடிகுண்டு வீசியது. பின் அன்பரசன் அருகே வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த அன்பரசன் சம்பவ இடத்திலையே பரிதாபமாக பலியானார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர செயலை செய்தது யார் என்று காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

 

From around the web