பரபரப்பு.. ஆபாசமாக பேசிய கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய கள்ளக்காதலி..!

 
எண்ணூரில் கொலை
கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக காதலரை இரவோடு இரவாக கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவொற்றியூர் எண்ணூர் வ.உ.சி நகரை சேர்ந்தவர் சுப்பையா (56). வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, தனித்தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர். சுப்பையா மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும், 2 குழந்தைகளுக்கு தாயான செல்வி (48) என்பவரும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

Aminjikarai, Chennai : அமைந்தகரை: எண்ணூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை. | Public App

இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். சுப்பையா மற்றும் செல்வி இருவருக்கும் குடிப்பழக்கம் இருப்பதால் தினமும் இரவு நேரங்களில் மது அருந்தி வந்துள்ளனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது சுப்பையா செல்வியை ஆபாசமாக பேசி திட்டி, அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வி, நள்ளிரவில் சுப்பையா கழுத்தை துணியால் நெரித்து கொன்றுள்ளார். பின்னர், அதிகாலை 3 மணியளவில் அதே பகுதியில் வசிக்கும் சுப்பையாவின் மகள் வீட்டிற்கு சென்ற செல்வி, சுப்பையா போதையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நான், சடலத்தை இறக்கி கீழே வைத்துள்ளேன்,’’ என்று கூறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மகள் மற்றும் உறவினர்கள், அங்கு சென்று பார்த்தனர். பின்னர், செல்வியிடம் இதுபற்றி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்த உறவினர்கள் எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

From around the web