பரபரப்பு.. தனித்தனி அறையில் தம்பதியினர் சடலம்.. தீவிர விசாரணையில் போலீஸ்..!
Oct 20, 2023, 19:17 IST

தனித்தனி அறையில் இருந்த கணவன் மனைவி சடலங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கே.எம். ஆர் நகர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இராசன் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி தனியே வசித்து வந்தனர். இந்த நிலையில் தனியே வசித்து வந்த இருவரும் வெகு நேரம் கழித்தும் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தனர்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தனித்தனி அறையில் சடலமாக இருந்த இராசன் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
From around the
web