பரபரப்பு.. புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட பெண் கைதி.. விசாரணையில் அதிர்ச்சி..!
Oct 22, 2023, 10:31 IST

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜீயர்புரத்தில் மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கில் காந்திமதி கைது செய்யப்பட்டார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் மீனாட்சி என்கிற காந்திமதி என்ற கைதிக்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமின் கிடைத்தும் உறவினர்கள் யாரும் உறுதி பத்திர எழுதி தர வராததால், மனமுடைந்து தற்கொலை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் பெண் கைதி தூக்கில் தொங்கி சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
From around the
web