"நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கு?” - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

 
எடப்பாடி சிறை

தேனி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தற்போதைய அரசு மற்றும் முதல்வர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தேனி

சமீபத்தில் புழல் மத்திய சிறையில் முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகும், தேனியில் கைதிகள் தப்பியோடும் அளவுக்குச் சிறைத்துறை இவ்வளவு பலவீனமாகவும் சீர்குலைந்தும் காணப்படுகிறதே எனச் சாடியுள்ளார்.

புழல் சிறையில் முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை உண்மையான நிர்வாக ஆய்வா? அல்லது பத்திரிகைகளில் செய்தியாக வருவதற்காக நடத்தப்பட்ட ஜோதிடப் பரிகார நிகழ்வா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேனி கைதி கைது

தேனி சிறை உடைப்புச் சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எடப்பாடியின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.