5 தொகுதிகள் இடைத்தேர்தல் தடை வழக்கு - உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது!
Oct 1, 2026, 19:00 IST
திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் மற்றும் விராலிமலை ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தேர்தல் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் முழுமையாக முடிவுக்கு வந்த பின்னரே இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே தனது தரப்பு விளக்கத்தில் தெரிவித்திருந்தது.
இவ்வழக்கின் அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழட்டின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.
