குதிரை பேர வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
குதிரை பேர

தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைதான மற்றும் முன்ஜாமீன் கோரிய மேலும் இருவருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

கடந்த ஜூலை 14-ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர் என்பவருக்கு நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய கரூர் மாவட்டம் செங்குந்தபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்குச் சில நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குதிரை பேர வழக்கு கரூர்

சட்டமன்ற உறுப்பினர்களைப் பண பலம் மற்றும் பல்வேறு ஆசைகளைக் காட்டி வளைக்க முயன்றதாக எழுந்த குதிரை பேரப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் மேலும் இருவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.