பாஜக கருப்பு முருகானந்தம் வழக்கில் ஆபாசப் படங்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
பாஜக கருப்பு முருகானந்தம்

திருமணம் செய்வதாக ஏமாற்றியதாகப் பாஜக பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகாரில், அக்கட்சியின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

கருப்பு முருகானந்தம்

தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக பாஜக பெண் நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் கருப்பு முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தராவிட்டால் பொதுவெளியில் அவமானப்படுத்துவதாக அப்பெண் மிரட்டியதாகவும் கூறி அவர் முன்ஜாமீன் கோரியிருந்தார்.

பாஜக கருப்பு முருகானந்தம்

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, புகார் அளித்த பெண் தொடர்பான சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ள ஆபாசப் படங்களை உடனடியாக நீக்குமாறு சைபர் கிரைம் காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.