ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகள் விசாரணையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
ஹெச்.ராஜா

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக அஅவதூறாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அதன் அதிகாரிகளைக் விமர்சித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக ஹெச்.ராஜா மீது காவல்துறை தரப்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவ்வழக்குகளை முழுமையாக ரத்து செய்யக் கோரி அவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஹெச் ராஜா

இந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், ஹெச்.ராஜாவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க  இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாகக் காவல்துறை தரப்பில் வரும் அக்டோபர் 29-ம் தேதிக்குள் விரிவான பதிலறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஒத்திவைத்தனர்.