குதிரை பேர வழக்கின் விசாரணைக்கு மேலும் 2 வாரங்கள் தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு!
Aug 27, 2026, 20:30 IST
ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்த முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையைச் சென்னை உயர்நீதிமன்றம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சேதுராஜ், கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, விசாரணைக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சர்ச்சைக்குரிய குதிரை பேர வழக்கில் யூடியூபர் திருநாவுக்கரசு உட்பட மொத்தம் 14 பேர் இதுவரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பல நபர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தின் மூலம் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
