பெற்றோர்களே உஷார்... 13 வயசு தான்... பலூன் வெடித்து மூச்சுத்திணறலால் உயிரிழந்த சிறுவன்!
சமீப காலமாக சின்னஞ்சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை உணவு சாப்பிடும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விடுகின்றனர். விளையாட்டு காட்டிக் கொண்டே சாப்பிட கொடுக்கும் போது சில நேரங்களில் விளையாட்டு கூட விபரீதத்தில் முடிந்து விடுகின்றன. அந்த வகையில், தற்போது சிறுவன் ஒருவன் பலூன் ஊதியபோது, அது வெடித்து சிதறி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம், ஜலியால் தாலுகா, ஜோகனகொப்பா கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண பெல்காம்வகர். இவரின் மகன் 13 வயது நவீன் நாராயணன் . இந்த சிறுவன் அங்குள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது, வீட்டில் இருந்த பலூனை ஊதி விளையாடிக் கொண்டிருந்தார். தொடர்ந்து நீண்ட நேரம் பலூனை ஊதியபோது, அது பெரிதாகி திடீரென வெடித்துள்ளது. இந்த பலூன் வேகத்தில் வாய் வழியாக சிறுவனின் சுவாச பாதையில் சிக்கிக் கொண்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட சிறுவனை, உடனடியாக அவரது பெற்றோர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சிறுவன், மூச்சுச்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
