105 வயசு.. கொடைக்கானல் நகர அதிமுக பிரமுகரின் தாயார் காலமானார்... அதிமுகவினர் நேரில் அஞ்சலி!

 
அன்னம்மாள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிமுக நகர அவைத்தலைவரின் தாயார் தனது 105வது வயதில் காலமானாா். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுகவினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கொடைக்கானல் எம்.எம்.தெருவைச் சோ்ந்த ஐசரி தாமஸ். இவரது மனைவி அன்னம்மாள் (105). 1920ம் ஆண்டு பிறந்தவர் அன்னம்மாள். இந்தத் தம்பதியருக்கு 7 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா். கணவா் ஐசரி தாமஸ் 70வது வயதில் உயிரிழந்தாா்.

கொடைக்கானலில் தனது மகன்களுடன் வசித்து வந்த அன்னம்மாள் நேற்றிரவு தனது மகன்களுடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காலமானாா்.

இவரது மகன் ஜான் தாமஸ் கொடைக்கானல் நகர அதிமுக அவைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். பேரன், பேத்திகள் உட்பட 145 போ் இவரது நெருங்கிய உறவினா்களாக உள்ளனர்.  அன்னம்மாளின் உடலுக்கு பழனி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபால், அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற இணைச் செயலா் பிச்சை, பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், பல்வேறு சபைகளைச் சோ்ந்தவா்கள் அஞ்சலி செலுத்தினா்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web