27 வயசு தான் ஆச்சு... கொச்சி ஹோட்டலில் இயக்குநர் பெல்ராஜ் மாரடைப்பால் மாரணம்!

 
மலையாள இயக்குநர் பெல்ராஜ்

மலையாளத் திரைப்படத் துறையைச் சேர்ந்த இளம் இயக்குநரான பெல்ராஜ் கலாரிக்கல் (27), கொச்சியில் உள்ள ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையின்படி, அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மலையாள இயக்குநர் பெல்ராஜ்

மறைந்த இயக்குநர் பெல்ராஜ் கலாரிக்கல், 'நிழல்', 'மதுரம்', 'தாகினி' போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களுக்குத் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். பின்னர், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக 'கப்பி ஸ்குவாட்' என்ற புதிய இணையத் தொடரை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். நான்கு இளைஞர்களின் தொழில் முனைவோர் கனவை மையமாகக் கொண்ட இத்தொடர், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெல்ராஜ் கலாரிக்கலுக்கும் அவரது நீண்ட நாள் காதலிக்கும் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் ஆசியுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. திருமணமாகிச் சில வாரங்களே ஆன நிலையில் அவர் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினரையும் திரையுலகினரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்குச் சக இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ஓடிடி தளம் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.