சும்மாவே சலங்கை கட்டி ஆடுவாரு... நாளை முதல் அனல் பறக்கும் பிரச்சாரம்... திருத்தணியில் துவங்குகிறார் சீமான்!

 
சீமான் சீமான்

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி எவ்விதக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிடும் அதிரடி முடிவை எடுத்துள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை முதல் திருத்தணியில் இருந்து தனது அனல் பறக்கும் முதற்கட்டத் தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார்.

சீமான்

பரப்புரை பயணத் திட்டம்:

தேதி பரப்புரை நடைபெறும் முக்கிய இடங்கள்
மார்ச் 23 (நாளை) திருத்தணி (தேர்தல் பரப்புரை தொடக்கம்)
மார்ச் 25 கிருஷ்ணகிரி, சூளகிரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம்.
மார்ச் 26 மேட்டூர், ஓமலூர், சேலம், வாழப்பாடி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி.
மார்ச் 27 சங்கராபுரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, வந்தவாசி.
மார்ச் 28

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடி.

சீமான்

தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே சீமான் நடத்திய மரம், மாடு மற்றும் கடல் அன்னை சார்ந்த சுற்றுச்சூழல் மாநாடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தேர்தல் செலவுகளுக்காக மக்களிடமே 'திறள்நிதி' (Crowdfunding) கோரி சீமான் விடுத்த அழைப்பிற்குத் தம்பிகள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தும் சீமான், வட மாவட்டங்களில் இருந்து தனது முதற்கட்டப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளார்.