நெஞ்சை உறைய வைக்கும் வாக்குமூலம்... மனைவியை கொலை செய்யும் முன் நாயை கொன்று வேக வைத்து ஒத்திகை !

 
வெங்கடமாதவி

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேலகுடா, நியூ வெங்கட்ராமா காலனியில் வசித்து வருபவர்  39 வயது குருமூர்த்தி.  முன்னாள் ராணுவ வீரரான  இவரது மனைவி 35 வயது வெங்கட மாதவி. இவர்களுக்கு  ஒரு மகன், ஒரு மகள்.  ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற குரு மூர்த்தி காஞ்சனப்பேட்டையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் குருமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது.

வெங்கடமாதவி


இது குறித்து அடிக்கடி  கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குருமூர்த்தி மனைவியை கொலை செய்தார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டினார். எலும்புகளை தனியாகவும், சதைகளை தனியாகவும் பிரித்தெடுத்தார். அவற்றை குக்கரில் போட்டு வேக வைத்தார். வேகவைத்த சதைகள், எலும்பு துண்டுகளை ஜில்லேலவில் உள்ள குளத்தில் வீசினார்.இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர்.  குருமூர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  

வெங்கடமாதவி

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த குருமூர்த்தி, உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்துள்ளார். இந்த உடலை எப்படி அழிப்பது என்பது குறித்து  செல்போனில் யூடியூப் மற்றும் ஆங்கில படங்களை பார்த்து எலும்புகளை கரைப்பது எப்படி என வீடியோக்களை பார்த்தார். இதனை தொடர்ந்து நாய் ஒன்றை கொன்று சோதனை செய்ய முடிவு செய்தார். அவரது வீட்டின் அருகே சுற்றி திரிந்து கொண்டிருந்த நாய்க்கு உணவளித்து  வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். உள்ளே வந்த நாயை அடித்துக்கொன்று துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் நாய் கறி எலும்புகளை குக்கரில் வேகவைத்து, வெயிலில் காயவைத்து பொடிப்பொடியாக்கி கால்வாய் தண்ணீரில் கரைத்துள்ளார். அதே பாணியில் மனைவியை வெட்டி சமைத்து தண்ணீரில் வீசியதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web