மனைவிக்கு 20 ஆண்டுகளாக போதைப்பொருள், மயக்க மருந்து கொடுத்து, கணவர் உட்பட 13 பேர் பாலியல் வன்கொடுமை ... இங்கிலாந்தில் அதிர்ச்சி!

 
மனைவி போதைப்பொருள்

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில், 60 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவிக்கு கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்ட வழக்கில், கணவர் மற்றும் தொடர்புடைய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் மின்ஷூல் ஸ்ட்ரீட் கிரவுன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனைவியின் ஒப்புதல் இன்றி ஆபாசப் படங்களைப் பகிர்தல், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் என அந்த முதன்மைக் குற்றவாளி மீது மொத்தம் 60 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலியல் பலாத்காரம் இளம்பெண்

தொடக்கத்தில் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து வந்த அந்த நபர், நீதிமன்றத்தில் தனது மனைவியின் முன்னிலையிலேயே குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார்.

கணவர் தவிர, இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 74 வயதுக்குட்பட்ட மேலும் 12 பேர் மீது இந்தக் கொடூரச் செயலில் தொடர்புடையதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

பாலியல் விபச்சாரம் பலாத்காரம் இளம்பெண் மாணவி ஆபாசம் சிசிடிவி கேமரா செல்போன் உல்லாசம் சொகுசு

அவர்கள் அனைவரும் குற்றங்களை மறுத்துள்ள போதிலும், இந்த வாரம் முழுவதும் இவர்களுக்கான விசாரணை தீவிரமாக நடைபெற உள்ளது. இந்தச் சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கும் மற்றும் சிக்கலான விசாரணை என்று தெரிவித்துள்ள உதவி தலைமை காவலர் ரிக் ஜாக்சன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேவையான அனைத்துச் சிறப்புப் பாதுகாப்பும் தொடர் ஆதரவும் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.