17 முறை கத்திக்குத்து.. வேகத்தடை போல் மனைவியின் மீது கார் ஏற்றி கொன்ற கணவன்..!!

 
பிலிப் மேத்யூ - மெரின் ஜாய்

அமெரிக்காவில் வசித்த இந்தியர் ஒருவர் தனது மனைவியை 17 முறை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் இந்திய வம்சாவளியினரான, பிலிப் மேத்யூ - மெரின் ஜாய் என்ற இளம் தம்பதி வசித்து வந்தனர். 2020ல் தம்பதியர் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, 26 வயதாகும் மெரின் ஜாய் கணவரை பிரிந்து வாழ முடிவு செய்தார். அமெரிக்காவில் இது சாதாரணம் என்ற போதும் இதனால் கணவர் பிலிப் மேத்யூ கடும் ஆத்திரமடைந்தார். பிரிய விரும்பிய மனைவியை சமாதானப்படுத்த முயன்றார். அதே வேளையில் பிரச்சினையின்றி சேர்ந்து வாழ எந்த உத்திரவாதத்தையும் அவரால் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையே, ஒருநாள் பணிக்கு கிளம்பிய மெரின் ஜாய், அதன் பின்னர் வீடு திரும்பிய போது தன்னைவிட்டு பிரியப்போவதாக பிலிப் சந்தேகப்பட்டார்.

படுகொலையான மெரின் ஜாய்

ஆத்திரத்துடன் மனைவி நர்சாக பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்றார். அங்கே பணி முடித்து பார்க்கிங் ஏரியாவில் காரை எடுத்த மெரின் மீது தனது காரால் மோதினார். பின்னர் எடுத்துச் சென்ற கத்தியால் 17 முறை குத்திக்கொன்றார். அப்படியும் மெரின் உயிர் பிரியாது போகவே, தரையில் உடலை கிடத்தி வேகத்தடை போன்று முன்னும் பின்னுமாக தனது காரை செலுத்தினார். அதன் பின்னர் அங்கிருந்து காரில் விரைந்து மறைந்தார். 

US: Indian man gets life in prison for stabbing wife 17 times, running over  her with car | Crime News - News9live

நம்ப முடியாத வகையில் அதன் பிறகும் சில மணி நேரங்கள் உயிரோடு இருந்த மெரின், தன் மீதான கொலைவெறித் தாக்குதல் நடத்திய கணவன் பிலிப் குறித்து மரண வாக்குமூலம் தந்த பின்னரே இறந்தார். சிசிடிவி மற்றும் நேரடி ஆதாரங்கள், கொலையின் தீவிரத்தை உணர்த்தவே, வழக்கை விசாரித்த புளோரிடா நீதிமன்றம் பிலிப் மேத்யூக்கு மரண தண்டனை கொடுக்க எத்தனித்தது. ஆனால், மனைவியுடன் பிலிப் மேத்யூ சுமூகமாக வாழ்ந்த தருணங்களை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் முன்வைத்து, ஆயுள் தண்டனையாக அவரது வழக்கறிஞர் குறைத்தார். எனினும், மனைவியை வேகத்தடையாக பாவித்து காரை ஏற்றிய கொடூரக் கணவனை இப்போதும் அதிர்ச்சி விலகாது அமெரிக்க ஊடகங்கள் எழுதி வருகின்றன.

From around the web