மனைவியைக் கொன்றுவிட்டு மாரடைப்பு என நாடகமாடிய ஆட்டோ டிரைவர் !
கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருபவர் மஞ்சுநாத். இவருக்கு மங்களா (27) என்ற மனைவியும், மூன்று வயதில் ஒரு குழந்தையும் உள்ள நிலையில், மஞ்சுநாத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் மது அருந்திவிட்டு வந்த மஞ்சுநாத், தூங்கிக் கொண்டிருந்த மனைவி மங்களாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஆத்திரமடைந்த அவர், மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார்.
உயிரிழந்த மங்களாவின் உடலில் காயங்கள் இருந்ததைப் பார்த்த அவரது தங்கைக்குச் சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் மனைவியைக் கொன்றது அம்பலமானதை அடுத்து, மஞ்சுநாட்டைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
