நெகிழ்ச்சி வீடியோ... காவல் நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு சக காவலர்கள் வளைகாப்பு!

 
குளச்சல் காவல் நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் நிறைமாத கர்ப்பிணியான பெண் ஊழியருக்கு, காவல் நிலையத்திலேயே சக காவலர்கள் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தி சிறப்பித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையத்தில் தகவல் பதிவு உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் ஜாசிகா. இவர் விபத்தில் உயிரிழந்த ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மகளாவார்.

நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஜாசிகாவிற்கு உரிய உறவினர்கள் போல் முன்வந்து சக காவலர்கள் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

வளைகாப்பு

பாரம்பரிய முறைப்படி சீர்வரிசைகள் மற்றும் அறுசுவை உணவுகளை வழங்கியதுடன், மடிப்பண்டம் உள்ளிட்ட சீர்களை வழங்கி சக காவலர்கள் அவரை மனதார வாழ்த்தினர். காவல் நிலையத்தPx நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.