நெகிழ்ச்சி வீடியோ... குழந்தைகளுடன் ராக்கி கயிறு கட்டி ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி!

 
ரக்‌ஷாபந்தன் மோடி

நாடு முழுவதும் சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் குழந்தைகளுடன் இணைந்து இக்கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.


ரக்‌ஷாபந்தன் நாளையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அன்பு, பாசம் மற்றும் பரஸ்பர நம்பிக்கைக்கான இந்தப் பந்தம் என்றும் விலகாமல் உறுதியாக இருக்க வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் திரண்டிருந்த பள்ளிக் குழந்தைகள் பலரும் பிரதமருக்கு ராக்கி கயிறைக் கட்டித் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

ரக்‌ஷா பந்தன்

குழந்தைகளுடன் ராக்கி கயிறு கட்டிக் கொண்டாடிய இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, இது தனக்கு மிகவும் மறக்க முடியாத ஒரு தருணம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.