இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!

 
இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை !


தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து  சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது .அதில்  ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு வங்கம் - வங்கதேசம் கடற்கரை பகுதிகளில், சாகர் தீவுகளுக்கும் - கேபுபாராவுக்கும் (வங்கதேசம்) இடையே நேற்று கரையை கடந்துள்ளது. 

கனமழை
தமிழகத்தில் இன்று மே 30ம் தேதி  ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஒரே இரவில் 100 மி.மீ. கனமழை... பெங்களூருவில் வெள்ளிக்கிழமை வரை மழைக்கான எச்சரிக்கை!
சென்னையை பொறுத்தவரை சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.