வெளுத்து வாங்கும் கன மழை..அணை உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்.. நகரத்தையே காலி செய்த 2 லட்சம் மக்கள்!
ரஷ்யா அருகே கஜகஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஓரன்பர்க் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்த கனமழையால் அங்கு ஓடும் உரல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஒர்ஸ்க் நகருக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்பு பகுதிகளை மூழ்கடிக்கும் அபாயம் ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓர்ஸ்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஆற்றங்கரையோர குடியிருப்புகளில் வசிக்கும் 2,000க்கும் அதிகமான மக்க பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், தொடர் கனமழையால் உரல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது. பின்னர் அணையில் மொத்த தண்ணீரும் வெளியேற தொடங்கியது.

இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியே பெரும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அணைப் பகுதியைச் சுற்றியுள்ள வெள்ளத்தில் சிக்கிய 2 லட்சம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
