சென்னையில் தொடர்மழை... விமான நிலையம் மூடல்.. மின்சார ரயில் சேவை குறைப்பு!
சென்னையிலும், சென்னை புறநகர் பகுதியிலும் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில், ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விமான ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் சென்னை விமான நிலையம் நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல புறநகர் மின்சார ரயில் சேவையும் இன்று குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிலைமை சீரான பின்னர் மீண்டும் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கனமழை காரணமாக, சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து புறநகர் பிரிவுகளிலும் மின்சார ரயில் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை குறைவான அளவில் இயக்கப்படும். புயலின் போது பயணிகளின் பாதுகாப்பை கருதில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் சேவைகள் எவ்வித தடை, தாமதமும் இன்றி வழக்கம் போல் இயங்குவதாக சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிலையப் படிகள், லிஃப்ட்களைப் பயன்படுத்தும்போது பயணிகள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோயம்பேடு, செயின்ட் தாமஸ் மவுன்ட், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் மெட்ரோ பயணிகளின் உதவிக்கு 1860 425 1515 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், பெண்களுக்கான ஹெல்ப்லைன் 155370 என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாருர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்கள், திரையரங்குகள் இன்று மூடப்பட்டுள்ளன.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!