விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை!! பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது!!

 
மழை

நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்தின் தலைநகர் சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.  அந்த வகையில் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பாடி, கொரட்டூர், கள்ளிகுப்பம். மதுரவாயல், போரூர், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, வானகரம், ஐயப்பன்தாங்கல்   பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சாலைகளில் மழைநீர்  பெருக்கெடுத்து ஓடி வருகிறது.  

மழை
தற்போதும், மழை பெய்து கொண்டிருக்கிறது.  இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட  நிலையில், சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை மாணவி

அதே நேரத்தில்  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்  நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர்  தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் வழக்கம் போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web