அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!!

 
school rain

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சதீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

rain in Northwest India

இன்றும் நாளையும் தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை,   திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain Womens Walking

அதன்படி   சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ,தூத்துக்குடி  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web