சூடானில் கனமழை... அணை உடைந்து வெள்ளப்பெருக்கு... 148 பேர் பலி; 10,000 வீடுகள் சேதம்!
சூடானில் கனமழை பெய்து வரும் நி லையில், அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 148 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 10 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் போன்றவை நிரம்பி வழிகின்றன. இந்தநிலையில் கிழக்கு பிராந்தியமான அர்பாத்தில் மிகப்பெரிய அணைக்கட்டு ஒன்று அமைந்துள்ளது. சுமார் 2½ கோடி கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த அணை அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாக இருக்கிறது.
#متداول #السودان #Sudan
— Sudan News (@Sudan_tweet) August 27, 2024
د.مدثر مدير مستشفى #طوكر يسبح من ميز الأطباء إلى المستشفى لمعاينة المرضى ، في ظل أوضاع بيئية قاهرة جراء السيول العارمة التي ضربت المدينة.
Dr. Mudather, Director of Tokar Hospital, swims from the doctors' lounge to the hospital to examine patients. In… pic.twitter.com/HXp3AFEnRy
ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் அந்த அணை முழு கொள்ளளவை எட்டியது. எனவே எப்போது வேண்டுமானாலும் உடையும் அபாயம் இருந்தது. இதனால் அணையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை உடைந்தது. அப்போது போர்ட் சூடான் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் அங்குள்ள சுமார் 10 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதனை தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. எனினும் இந்த மீட்பு பணியில் இதுவரை 148 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 218 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா