கனமழை... அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது வானம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
மழை

கடந்த சில தினங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலத்திற்கு வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர்.
இன்று வடகிழக்கு பருவமழை  தொடக்கம்!      நம்ம மாவட்டத்திற்கு கனமழை !
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும் 28ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், இன்று நீலகிரி, கோவை  மாவட்டங்களில் கனமழை பெய்ய  வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை
இந்நிலையில், இன்று தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்று இரவு நல்ல மழை பெய்த நிலையில், இன்று காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web