கனமழை... புயற்காற்று... சென்னை உட்பட 8 மாவட்டங்களிலும் தயார் நிலையில் மீட்பு குழுவினர் ... அனைத்து கடற்கரை சாலைகளும் மூடல்!
இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறைஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் தயார் நிலையில் மீட்பு குழுவினர் உள்ளனர். சென்னை மெரீனா உட்பட கடற்கரை சாலைகள் தடுப்புகள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் ஃபெங்கல் புயல் மாமல்லபுரம் காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஈசிஆர், ஓஎம்ஆர்.சாலைகளில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை மெரீனா உட்பட கடற்கரை சாலைகளுக்கு பொதுமக்கள் செல்வதைத் தடுக்கு விதமாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேவையில்லாமல் இந்த பகுதியில் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இது குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சென்னை, புறநகர் பகுதிகளிலும் இன்று நவம்பர் 30ம் தேதி ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் புயல் காரணமாக மீட்பு உபகரணங்களுடன் இந்திய கடற்படையின் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும், சென்னை உள்ளிட்ட இந்த 8 மாவட்டங்களிலும் மீட்பு குழுவினர் விரைந்துள்ள நிலையில், தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!