கனமழை எச்சரிக்கை.. நாளை புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

 
விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

தொடர் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை அக்டோபர் 26ம் தேதி, திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விடுமுறை

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்திலும் நாளை 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையின் தீவிரத்தைப் பொறுத்துப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே  சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை விடுமுறை

மேலும், பள்ளி விடுமுறை தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பரவும் போலிச் செய்திகளையும் வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.